ஊத்துக்கோட்டை: மார்ச்:8
ஊத்துக்கோட்டை விவேகானந்தா விஷன் பள்ளியில் பத்தாம் வருட ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளியின் சேர்மன் கே ரங்கநாதன், பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகி கே கிரிஜா, பள்ளியின் துணை இயக்குனர் கே ராஜேஷ், பள்ளியின் தாளாளர் ஆர் அவந்திகா ராஜேஷ், தலைமையாசிரியர் சசீனா, நிர்வாக ஆலோசகர் கே சுதர்சனம், போக்குவரத்து கண்காணிப்பாளர் கே எம் பாலகிருஷ்ணன் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை துணை இயக்குனர் கே ராஜேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை சாரக துணை கண்காணிப்பாளர் கா கணேஷ் குமார் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு கேடயம் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியை காண மாணவரின் பெற்றோர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.