பணியிடை நீக்கம் வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகமானசெய்யப்பட்ட பொது மேலாளருக்காக மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம், வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகத்திற்க்கு – பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் ஒன்றிய பால் பண்ணையில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த தயிர் பாக்கெட்டுகள் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முற்றிலுமாக விநியோகம் நடைபெறாததால் முன் பணம் செலுத்தி ஆர்டர் கொடுத்திருந்த பால் முகவர்கள் அனைவரும் அதிகமான பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிட்டது.
வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் தொடர் மெத்தனப் போக்கினால் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாக இருப்பதாலும், அதனால் பால் முகவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாலும் இனி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆவின் நிர்வாகத்திற்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி தயிர் விநியோகம் நடைபெறாமல் போன விவகாரத்தில் அன்றைய தினம் பணியில் இருந்த வேலூர் மாவட்ட ஒன்றியத்தின் துணை மேலாளர் உமாமகேஸ்வர் ராவ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த துரித நடவடிக்கையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்றது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணை மேலாளர் உமாமகேஸ்வர் ராவை (15.03.2023) மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தி உத்தரவிட்ட ஆவின் நிர்வாகத்தின் தவறான செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அதேபோல் தவறு செய்யும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்படும் போது வேறு ஒன்றியங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவது தான் வழக்கமான நடைமுறையாகும்.
எனவே வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் துணை மேலாளராக இருந்த உமாமகேஸ்வர் ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே இடத்தில் அவருக்கு பணி நியமனம் வழங்கிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடவும், மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட துணை மேலாளரை வேறு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்து அவர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளது.