திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 37 ஆம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் சேர்மன் கே ரங்கநாதன், பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகி கே கிரிஜா, பள்ளியின் தாளாளர் ஆர் அவந்திகா ராஜேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் விவேகானந்தா விஷன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சசீனா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை விவேகானந்தா பள்ளியின் துணை இயக்குனர் கே ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பிரபல காமெடி நடிகர் சூரி மற்றும் மருத்துவர் எம் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர். விழாவில் கராத்தே மற்றும் நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் சூரி கேடயம் வழங்கினார்.

இவ்விழாவை கான மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.