
ஒசூர் மாநகரில் வீர தியாகி திப்புசுல்தான் பேரவையின் சார்பாக மதரசாவில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
ஒசூர் KCC நகரில் உள்ள திப்புசுல்தான் மதரசாவில் ஆண்டுதோறும் ஆண்டுவிழா கொண்டாடப்படுவது வழக்கம் அது போல் மாநில தலைவர் சித்திக் அவர்களின் ஆலோசனைபடி வீர தியாகி திப்புசுல்தான் பேரவையின் மாநில அமைப்புச்செயலாளர் A.சல்மான் தலைமையில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் குரான் பயின்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் ஒசூர் மாநகர தலைவர் அப்துல் சலாம்,செயலாளர் ஜாகிர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக 25வார்டு கவுன்சிலர் சிவகுமார்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் காதர் பாஷா மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டு நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் போதித்த இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி உறையாற்றினார்கள்.விழாவின் முடிவில் அஸ்லம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.