தமிழ்நாடு முதலமைச்சர் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கான கட்டடம் கட்டும் பணிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கவுள்ள பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன்,குடியாத்தம் நகர மன்ற தலைவர் சவுந்தர்ராஜன்,குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சச்சிதானந்தம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன்,இணை இயக்குனர்(சுகாதார பணிகள்) மரு.கண்ணகி,குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கள்ளூர் ரவி,நத்தம் பிரதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.