முதலமைச்சர் கோப்பைக்கான
போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு கபடி போட்டி கலெக்டர், மற்றும் எம்பி துவக்கி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு கபடி போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதில் மாவட்டத்திலிருந்து வெவ்வேறு இடத்தில் உள்ள எட்டு பள்ளிகள்,ஐந்து கல்லூரிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் அணியை சேர்ந்த வீராங்கனைகளுக்கு முதலாவது வெற்றி பெரும் ஒவ்வொரு வீரருக்கும் 3000 ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது, இரண்டாவது வரும் வீரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது, மூன்றாவது வரும் ஒவ்வொரு வீரருக்கும் 1000 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் நோயலின் ஜான் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.