வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், நாகல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஜடைகுட்டை நீர்நிலை தூர்வாரும் பணி, தரிசு நில மேம்பாட்டு பணி மற்றும் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், நாகல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன்,வேளாண் இணை இயக்குநர் விஸ்வநாதன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன்,உதவி இயக்குநர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அபிலா,வட்டாட்சியர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.