வேலூர் மாவட்டம் வேலூர் தெற்கு காவல் நிலைய வளாகத்தில் சுமார் 60 அடி உயரம் கொண்ட அரசமரம் உள்ளது அந்த அரச மரத்தில் பட்டம் ஒன்று சிக்கிக் கொண்டிருந்தது அப்பட்டத்தில் இருந்த மாஞ்சா நூல் அவ்வழியாக சென்ற புறாவின் ரெக்கை மற்றும் காலில் சிக்கிக்கொண்டு மரத்திலிருந்து தலைகீழாக தொங்கியபடி இருந்த புறாவை கண்ட அருகில் உள்ள கடைக்காரர் வெங்கடேசன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த அடிப்படையில் உடனடியாக தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து 30 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கியபடி இருந்த புறாவை சுமார் அரை மணி நேரம் போராடி புறாவை மீட்டெடுத்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற கால்நடை மருத்துவர் ரவிசங்கர் இதைக் கண்டதும் அந்தப் புறாவுக்கு ஏதேனும் அடிபட்டுள்ளதா என்று பார்வையிட்டு பிறகு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை பார்த்து காயம் ஆறும் வரை பாதுகாப்பான முறையில் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மனிதநேயத்துடன் தகவல் தெரிவித்த கடைக்காரருக்கும் தீயணைப்பு துறை நற்கும் கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்
தடை விதிக்கப்பட்ட மாஞ்சா நூல்களால் மனிதர்கள் மட்டும் ஆபத்தான சுழல் இல்லை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தான சூழ்நிலை தான் நீடிக்கிறது .தற்போது பட்டம் விடும் காலம் என்பதால் அதைக் குறித்து விழிப்புணர்வு செய்தால் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாத சூழல் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது