திருவள்ளூர் / 21.02.23.
திருவள்ளூர் அருகே முன்னறிவிப்பு இன்றி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சுற்றி 6 அடிக்கு மேல் வனத்துறையினர் பள்ளம் தோண்டி உள்ளதால் உயிர்சேதம் ஏற்படம் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லிக்குழி ஊராட்சியில் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாய் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தின் அருகே வனத்துறையினருக்கு சொந்தமான காப்புகாடு உள்ளது. இதனால் வனத்துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி வனத்துறையினர் அந்த கிராமத்தை சுற்றி ஜே.சி.பி. இயந்திரம் மூலமாக 6 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி வருகின்றனர்.
குறிப்பாக அப்பகுதி பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் பள்ளம் தோண்டி உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் முதியோர்கள் குழந்தைகள் வேலைக்கு செல்பவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அந்த பள்ளத்தை கடந்து செல்ல வழி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே கிராமமக்கள் சென்றுவர வழியில் பள்ளம் தோண்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ்சிடம் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் சத்திய நாராயணன் தலைமையில் ஒன்றிக்குழு உறுப்பினர் பாலாஜி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ டி பாஸ்கர் மற்றும் ஆறுமுகம்,எம், மணி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ வி சேகர் வார்டு உறுப்பினர்கள் சிவகுமார், அன்பரசு மற்றும் பயனாளிகள் கிராம பொதுமக்கள் ஆகியோர்கள் புகார் மனு அளித்தனர்.