கே.வி.குப்பம் அருகே படவேட்டம்மன் கோயில் முன் இருந்த ராட்சத மரம் சூறை காற்றுடன் பெய்த மழையில் பெயர்ந்து விழுந்தது அதன் கிளைகளை வெட்டிய நிலையில் அந்த மரம் மீண்டும் எழுந்து நிற்பது அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த வாரம் சனிக்கிழமைஇரவு பலத்த மழை பெய்தது. ஆலங்கட்டியுடன் கூடிய சூறை காற்று வீசியதால் பல இடங்களில் மின்கம் பங்கள், மரங்கள். வீடுகள் சேதமடைந்தன.
தனியார் கல்லூரியில் ஓரின சேர்க்கை பேராசிரியரால் பாலியல் தொல்லை; மாணவர் குற்றச்சாட்டு
கே.வி. குப்பம் அடுத்த வேப்பங்கனேரி ஊராட்சி ரயில்வே கேட் ஒட்டி படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தின் முன்புறம் இருந்த சுமார் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று முன் தினம் சாய்ந்து விழுந்து கிடந்த மரத்தின் கிளை களை வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.
முழுவதும்வெட்டிவிட்டு சாய்ந்து போன மரத்தின் அடிப்பகுதியை அப்படியே போட்டுவிட்டு சென்றனர். இதனிடையே நேற்று காலை பார்த்தபோது அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேருடன் சாய்ந்து தரையில் கிடந்த மரத்தின் அடிப்பகுதி தானாக எழுந்து நின்றுள்ளது. இது குறித்த தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சாய்ந்து விழுந்து கிடந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டதால் மரத்தின் எடை குறைந்துள்ளது. இதனால் மரம் அதன் புவிஈர்ப்பு சக்தியால் தானாகவே எழுந்து நின்றது இதனால் இந்த மரம் மீண்டும் துளிர்விட்டு வளரவும் வாய்ப்பு உள்ளது’ என்றனர்.