வேலூரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் அதனை படுக்கைக்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் வேலூரில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் பூத் கமிட்டி பட்டியல் தயாரிப்பதுடன் நாடாளுமன்ற தேர்தல் ஆரம்ப கட்ட பணியை தொடங்குவது, திமுகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை வெற்றிபெற செய்வது, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு அதிக வாக்குகள் பெற்றுத்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.