ஆளுநர் அலுவலகம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அலுவலகம் போல் செயல்படுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் G.ராமகிருஷ்ணன் பேட்டி .
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் G. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் அலுவலகம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது குறிப்பாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் நஷ்டம் அடைந்து கடந்த இரண்டு வருடத்தில் 44 பேர் தற்கொலை செய்துள்ளனர் இதை தடை செய்ய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டதை இரண்டு முறை ஆளுநர் நிராகரித்து விட்டார். 44 பேர் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினரை அழைத்து சூதாட்டத்தில் நஷ்டம் அடைந்து எப்படி உங்கள் பிள்ளை தற்கொலை செய்து கொண்டான் என கேட்காமல்,
அதற்கு மாறாக சூதாட்டம் நடத்த கூடியவர்களை அழைத்து ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் பேசிக் கொண்டிருக்கிறார்,
பாஜக பொருத்தவரையில் பாஜக ஆளாதம் மாநிலங்களில் ஒன்று ஆட்சியை கவிப்பார்கள் கர்நாடகா, மத்தியபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தார்கள்
முடியவில்லை என்றால் அவர்கள் நியமித்த ஆளுநர் மூலம் ஆட்சியை சீர்குலைப்பார்கள் நீட் மசோதாக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை , ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை ஆகவே ஆளுநர் ஒரு பாஜகவின் தலைவர் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனால் தான் மத்திய அரசாங்கம் ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறோம்
மெத்தப் படித்த மேதாவி போல மார்க்சிய தத்துவம் இந்தியாவில் பாதிப்பை உண்டாக்கியது என்ன பேசுவதால்தான் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என ஜி ராமகிருஷ்ணன் பேசினார்.