கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம்,அ.பாண்டலம் தியாகராஜபுரம்,பாலப்பட்டு, அரசம்பட்டு
பூட்டை ஆகிய 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் -6500 எக்டரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏக்கருக்கு 35 மூட்டைகள் முதல் 40மூட்டைகள் வரை நெல் நல்ல மகசூல் கிடைத்த நிலையில் அதனை உரிய விலைக்கு விற்க முடியாமல் விவசாயிகள் மிகவும் அவதி அடைந்தனர் மேலும் தனியார் இடைத்தரகர்களிடம் நெல் விற்பனை செய்யும் போது மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர் இந்நிலையில் தேவபாண்டலம், புதுப்பாலப்பட்டு, வடசெமப்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் தமிழக அரசின் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம்
சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன் இன்று திறந்து வைத்தார் இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.