கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சுற்றி சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் போன்ற மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திற்கு செல்ல வேண்டுமானால் சங்கராபுரம் பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது இந்நிலையில் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதிய இட வசதிகள் இல்லாததாலும் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்து நிலையத்தில் தரையில் அமர்ந்து வெகு நேரம் காத்திருந்து செல்கின்ற.
இந்நிலையில்தான் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சங்கராபுரத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார் இந்த நிலையில் பேரூராட்சியின் சார்பில் பலமுறை சங்கராபுரம் பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு ஒலிபெருக்கி மூலம் அனைவருக்கும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் ஒரு கண்துடைப்பு நாடகத்தை மாதம் மாதம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலர்கள் நடத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் அதிகாரிகள் செய்யும் தவறினால் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மிக மன வருத்தத்துடன் கூறி வருகின்றனர்
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.