வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் கரூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான (அல்ட்ரா கான்கிரீட்) எனும் எம் சாண்ட் ,ரெடிமிக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் இருந்து பகல் நேரங்களில் வெண்மையான நிறம் கொண்ட புகை வெளியேறுவதாகவும், இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் கருமை நிறத்தில் ரசாயன புகை வெளியேற்றப்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் புகார் மனு அளித்திருந்தனர். பசுமை தீர்ப்பாயம் விசாரித்து (22-09-22) அன்று நிறுவனத்தை மூடவிட்டது. உத்தரவை மீறி அல்ட்ரா கான்கிரீட் நிறுவனம் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற நிலையில் இன்று பிரம்மபுரம் பகுதி பொதுமக்கள் அந்நிறுவனத்தின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பின்பு தொடர்ந்து அந்நிறுவனம் செயல்படாமல் இருக்க ஜேசிபி வாகனத்தை வரவழைத்து நிறுவனத்தின் உள்ளே லாரிகள் செல்லாதவாறு ஜே.சி.பி வாகனத்தை கொண்டு நுழைவாயில் குழியை தோண்டினர் இதனால் நிறுவனத்திற்கு செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தம்.
பசுமை தீர்ப்பாயம் மூட உத்தரவு ஈட்டும் தொடர்ந்து செயல்பட்ட நிறுவனத்தை ஜேசிபி ஐ கொண்டு நிறுவனம் தொடர்ந்து செயல்படவிடாமல் குழியைத் தொண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Fallow : Google News
Fallow : Telegram