வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை அனைத்து கட்சியினர் முன்னிலையில் திறந்து ஆய்வு தீயணைப்பான்களை மாற்றி வைக்க நடவடிக்கை ஆட்சியர் துவங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் வேலூர் அனைக்கட்டு காட்பாடி கே.வி.குப்பம் குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை அனைத்து கட்சியினர் திமுக,அதிமுக,காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது
பின்னர் வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த தீ அணைப்பான்கள் எடுத்து செல்லப்பட்டது காலவதியானதால் இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாச்சியர் கவிதா ,தேர்தல் வட்டாட்ச்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்