வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கே. எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் கலந்துரையாடலில் சிறப்பாக வினாக்களை எழுப்பிய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாடலாசிரியர் யுகபாரதி, ஊடகவியலாளர் செந்தில்வேல், மண்டல இணை இயக்குனர் கல்லூரி (கல்வி) முனைவர்.காவேரி அம்மாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், ஆதி திராவிட நல அலுவலர் இராமச்சந்திரன், துணை ஆட்சியர் ( பயிற்சி)பிரியா, கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.