திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொன்னேரி நகராட்சி,மீஞ்சூர்,சோழவரம்,கும்மிடிப்பூண்டி,எல்லாபுரம் ஒன்றியங்கள், ஆரணி,ஊத்துக்கோட்டை,மீஞ்சூர் பேரூராட்சிகளில் அடங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி கோபால் நாயுடு,சோழவரம் பிரகாஷ்,மீஞ்சூர் முத்துக்குமார்,பொன்னேரி செல்வகுமார்,மீஞ்சூர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். அருகில் அதிமுக நிர்வாகிகள் பஞ்செட்டி நடராஜன்,பொன்னுதுரை,அபிராமன்,சுமித்ராகுமார்,காமராஜ்,எஸ்.பி.அருள், மீஞ்சூர் மாரி,எம்.வீ.எஸ்.தமிழரசன்,காண்டீபன்,ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.