இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் இறந்த பேராசிரியருக்கு 14 ஆம் தேதியான இன்று விடைத்தாள்களை திருத்த வருமாறு திருவள்ளூவர் பல்கலைக்கழகம் அழைப்பாணை அதிர்ச்சி
வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் உள்ளது இதன் கட்டுபாட்டில் ராணிப்பேட்டை,வேலூர் திருப்பத்தூர் திருவண்னாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன் கட்டுபாட்டில் உள்ளது இதில் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியானது காட்பாடியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் இன்று முதல் நடக்கிறது இந்த விடைத்தாளை திருத்துவதற்காக ஊரீசு கல்லூரியின் வேதியியல் துறையை சேர்ந்த விஜயகுமார் என்ற பேராசிரியருக்கு விடைத்தாள்களை திருத்த இன்று வருமாறு திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுபாட்டு அலுவலர் சந்திரன் அவர்கள் அழைப்பாணையை அனுப்பியுள்ளார்.
இன்று வேதியியல் விடைத்தாள்களை திருத்துவதற்காக இவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது பேராசிரியர் விஜயகுமார் என்பவர் 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போய்விட்டார் இறந்து இரண்டு ஆண்டுகளான பேராசிரியரை திருவள்ளூவர் பல்கலைக்கழகம் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அழைத்திருப்பதை கண்டு ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இப்பல்கலைக்கழகம் பணி மூப்பு பட்டியலை எவ்வாறு இவர்கள் பராமரித்து வருகின்றனர் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாக உள்ளது பல்கலைக்கழகம் தொடர்ந்து பல குளறுபடிகளில் சிக்கி வரும் நிலை இவ்வாறு இறந்தவருக்கு அழைப்பாணையை அனுப்பியுள்ளது வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.