இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக
இலவச மகளிர் மருத்துவ முகாம்
வேலூர் கொணவட்டம் SSP திருமண மண்டபத்தில் மிக எழுச்சியாக நடைபெற்றது
இம் முகாமில் மருத்துவ சேவையாற்ற
டாக்டர் HSM.ஷேக் மீரான்
டாக்டர் KH.அப்துல் ரஹ்மான்
டாக்டர் N.நபிலா பாத்திமா
ஆகியோர் மருத்துவ சேவை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட தலைவர்
M.சையதுஅலி பாத்திமா
தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை தலைவர்
N.தஸ்லிமா
வரவேற்புரை ஆற்றினார்
இதில் சிறப்பு அழைப்பாளராக
வேலூர் மாநகராட்சி மேயர்
திருமதி சுஜாதா ஆனந்தகுமார்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் WIM மாநில செயற்குழு உறுப்பினர் B.ஜபீன்பானு,
முகம்மதியா மஸ்ஜித் முத்தவல்லி
A.முகமது சாதிக்
எஸ்டிபிஐ கட்சியின்
மாவட்ட தலைவர்
F.பஷீர் அஹ்மது
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் WIM மாவட்ட நிர்வாகிகள் சுஹாரா, மும்தாஜ்,பரிதா,நூரி மற்றும்
SDTU மாவட்ட தலைவர் A.சுல்தான் பாஷா
எஸ்.டி.பி.ஐ வர்த்தக அணி மாவட்ட தலைவர் S.சலீம் கான் மாவட்ட செயலாளர் GK.முஹம்மது
தல்ஹா மாவட்ட இணைச்செயலாளர்
A அபுபக்கர் வேலூர் தொகுதி தலைவர் M.முஹம்மது ரஃபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மருத்துவ பயனடைந்தனர். நிறைவாக WIM மாவட்ட பொருளாளர் J.ஆயிஷா நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.