வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் எடுத்துச் சென்ற இரண்டே முக்கால் 2.750 கிலோ தங்கம் ரூபாய் 35 லட்சத்துக்கு 50 ஆயிரம் பறிமுதல்.இதில் தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 34 லட்ச ரூபாயாகும்
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் சந்திப்பு வழியாக செல்லும் ரயில்களில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் நேற்று இரவு (மார்ச் 16) சோதனை நடத்தியுள்ளனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் பெட்டி எண் 3 இல் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 2 கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆவணமின்றி கொண்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் ஆவணங்கள் இன்றி தங்கம் மற்றும் பணத்தை கொண்டு வந்த நபர் கோயம்புத்தூரை சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் நகையை வேலூர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆனந்த நாராயணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.