இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளார். ஒரு பக்கம் அரசியல் வேலைகள் பிஸியாக இருந்தாலும் மறுபுறம் அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் படு பிசியாக நடித்து வருகிறார்.
15 வருடங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படம் பற்றி, உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் இந்தியன் 2 படத்தின் அப்டேட் குறித்து நிருபர்கள் கேட்டபோது, சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். அதனால் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகும்.
இந்த தகவல் கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ்-ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின்-சுபாஸ்கரன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். குறிப்பாக இப்படத்தில் அவர் 70 வயது பாட்டியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்துடன் இயக்குனர் ஷங்கர் ராம் சரண் இயக்கத்தில் ஆர்சி 15 படத்தையும் இயக்கி வருகிறார்.அதேபோல் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படத்தை செய்யவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.