திருவள்ளூர் மார்ச்.5
பொன்னேரியில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனைகூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன். மாவட்ட எஸ்பி சியாஸ் கல்யாண்.பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பொன்னேரி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளின் மேலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் வருவாய்த்துறை,காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களும் இதில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கை விட்டு வெளியேறும்படி கூறினார்.
கூட்டம் முடிந்த பின்பு அழைப்பதாகவும் அதுவரை உள்ளே வர வேண்டாம் எனவும் பின் கூட்டு அரங்கின் கதவை சாத்தி உள்பக்கமாக தாளித்துக் கொண்டனர். இதனால் பத்திரிகையாளர்கள் கூட்டம் முடியும் வரை வெளியே காத்திருந்தனர் வெளியேவந்த மாவட்ட ஆட்சியர் மத்திரிக்கையாளரிடம் கூறியதாவது வடமாநில தொழிலாளர்கள் தங்களது நிறுவன உரிமையாளர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் தெரிவித்து பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் மேலும் அவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் பேசினார்.