தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் என்பவரின் லஞ்ச வாங்குவதை கண்டித்தும் அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கான வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் லஞ்சம் வாங்கிக்கொண்டு பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதாகவும் லஞ்சம் கொடுக்காத பள்ளிகளுக்கு அனுமதி வழங்காமல் தாமதம் செய்வதாகவும்
வேலூர் மாவட்டத்தில் புதுப்பித்தல் அங்கீகாரம் பெறுவதற்காக 98 நர்சரி பள்ளிகள் 42 மெட்ரிக் பள்ளிகள் சார்பில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கவில்லை.
25 ஆயிரம் வழங்கிய நர்சரி பள்ளிகள், 40 ஆயிரம் வழங்கிய மெட்ரிக் பள்ளிகள்,1 லட்சம் வரை வழங்கிய சிபிஎஸ்சி பள்ளிகள் என 23 பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் ஆய்வுக்கு வரும்போது லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.அவர் மீது நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு DEO தாம்சனுக்கு எதிராக கண்டனர் கோஷங்களை எழுப்பினர்