காட்பாடி திருவலம் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் சத்தத்துடன் வெடித்து தீ ஏற்பட்ட விபத்தால் வேலூர் மாவட்டம் இருளில் மூழ்கியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அடுத்த ஈ பீ கூட்ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் நள்ளிரவு டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதாகி பெரும் சத்தத்துடன் வெடித்தது தீ ஏற்பட்டதால் இதனால் பெரிய மிட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னை மேல்பாடி திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ மாணவிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் அது மட்டுமில்லாமல் வேலூரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது பொதுமக்கள் மாணவர்கள் தேர்வு ஏதும் போது இது போன்ற நிகழ்வு அரங்கேறுவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மையங்களில் தடையில்லா மின்சாரம்
பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புக்கு வருகின்ற 13-ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு 14ஆம் தேதியும் பத்தாம் வகுப்புக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொது தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது.
மாணவர்கள் தேர்வு எழுதும் போது மின்தடை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னேற்பாடுகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்க ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை செய்யக்கூடாது எனவும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்வாரியம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது
தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். மின்சாரதுறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என இப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.