வேலூர், மார்ச் 08
வேலூர் மாநகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கடைகளில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மாநகர நகர் நல அலுவலர் கணேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து அந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.மேயர் சுஜாதா ஆனந்தகுமார், கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, தடைசெய்யப்பட்டபிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் சுஜாதா ஆனந்தகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.