வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் தாலுகா லத்தேரி காவல்துறையினர் அப்பகுதியில் லத்தேரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சித்தூர் பகுதியில் இருந்து லத்தேரி நோக்கி வந்து கொண்டிருந்த TN 09 AR 0500 ஃபோர்டு ஃபீஸ்டா என்கின்ற கார் பனமடங்கி காவல் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இப்போது சிறப்பு காவல் ஆய்வாளர் தண்டபாணி அவர்கள் காரை நிறுத்திய பொழுது கார் நிற்காமல் சென்றதாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து லத்தேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து ஃபோர்டு ஃபீஸ்டா TN 09 AR 0500 என்ற காரை நிறுத்தும்படி தகவல் அளித்ததின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் குமரன் அவர்கள் வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது கார் நிறுக்காமல் அதிவேகத்திலும் சினிமா பாணியில் மேலே மோதுகின்ற விதத்திலும் அதன் ஓட்டுனர் காரை வேகமாக ஓட்டியுள்ளார் திடீரென சற்று தொலைவு சென்றவுடன் கார நிறுத்திவிட்டு வாகனத்திலிருந்து தப்பித்து உள்ளார்கள்.
அங்கு சென்று காரை சாதனையிட்ட பொழுது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 செம்மரக்கட்டைகள் சுமார் 375 கிலோ கட்டை கடத்தப்பட்டது தெரியவந்தது . காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தலைமையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த காருக்கு பல்வேறு நம்பர் பிளேட் இருப்பது தெரியவந்தது.இதனை அடுத்து வேலூர் வனசரக அலுவலர் ரவிக்குமார் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனவர் அருணா தலைமையில் மற்றும் தணிகைவேல். மணி அலுவலர்கள் லத்தேரி காவல் நிலையம் வந்து 12 செம்மரக்கட்டைகளை பெற்றுக் கொண்டார்கள் இவற்றின் இன்றைய மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது.