வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான மையம் மற்றும் ஜலகண்டீஸ்வரர் ஆலயங்களில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வெள்ளிகவசம் அணிவித்து மகாதீபாராதனைகள் பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : 23/03/2023 இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய நட்சத்திர பலன்..
வேலூர்மாவட்டம்,வேலூர் அபீசர் லைன் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து வெள்ளிகவசம் அணிவித்து நவதானியத்தில் பெருமாள் உருவம் கோலமாக வரையப்பட்டு இதில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் :உங்கள் வருமானத்தை பெருக்க வெற்றிலையில் இதை தடவி பாருங்கள்.
இதே போன்று வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் சன்னைதியில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து யாகம் நடத்தி வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடந்தது பக்தர்கள் தரிசனம் செய்தனர்