சங்கராபுரம் அருகே எஸ் வி பாளையம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தெரியாமலேயே கிராம சபை கூட்டம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லி பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மொத்தமாக பத்து பேர் மட்டுமே கலந்து கொண்ட அவலம் ஏற்ப்பட்டுள்ளது.
அதுமட்டும் இன்றி நியாய விலை கடைக்கு பொருள் வாங்க வந்தவர்களை வாருங்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துக்கொள்ளுங்கள் என அழைக்கும் ஊராட்சி செயலர் மாயவன் எந்தத் தகவலும் இல்லாமல் நியாய விலை கடையில் பொருள் வாங்கும் பொழுது வந்து உட்காரு என்று சொன்னால் நான் எப்படி உட்காருவது வீட்டில் வேலைகள் அப்படியே உள்ளது என பொதுமக்கள் சரமாரியாக கேள்வி.
இந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே தண்டோரா போடுவதில்லை ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிப்பதில்லை என்று வார்டு உறுப்பினர் தெரிவித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இன்று காலை 8 மணி அளவில் தான் கிராம சபை கூட்டம் நடத்த கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து தகவல் வந்ததாக ஊராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. இந்த கிராமத்தில் தொடர்ந்து இதே போன்ற நிலைதான் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறனர்.