புதூர் ஊராட்சி ஒன்றியம்,மேலவெங்கடேசபுரம் கிராமத்தில் ராம்கோ நிறுவனத்தின் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ரூ.16.51-லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும்,ரூ.9.15-லட்சம் கிராம கண்மாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படித்துறையையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
நிகழ்வில் ராம்கோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் சரவணன் துணை பொது மேலாளர் ராமச்சந்திரன் மூத்த பொது மேலாளர் தங்கராஜ் ராம்கோ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் கிளை செயலாளர் கனகராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.