திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பூச்சி அத்திப்பேடு அடுத்த கல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (60). இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தது.
மாமியாரின் விபச்சாரத்தை மருமகன் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பூச்சி அத்திப்பேடு அடுத்த கல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (60). இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மேலும் எஸ்தரின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆனதால், இளைய மகள் தீபிகா மற்றும் மருமகன் மணிகண்டன் இரண்டு குழந்தைகளுடன் அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தனர்.
இந்த விஷயம் மருமகனுக்கு தெரியவந்ததையடுத்து, முத்துகிருஷ்ணனிடம் மாமியாரை பார்க்க வீட்டுக்கு வர வேண்டாம் என மணிகண்டன் எச்சரித்துள்ளார். முத்துகிருஷ்ணன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல் வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மருமகன் முத்துக்கிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மணிகண்டன் அரிவாளால் முத்துகிருஷ்ணனின் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, மருமகன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
சம்பவம் குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துக்கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.