வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி புதூர் பகுதியில் ஏழை எளிய அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக இடி மின்னல் சிலம்பம் குழு இணைந்த கைகள் சிலம்பம் குழு என்ற பள்ளியை ஆசான் ரஜினி ஆசான் வெங்கடேசன் ஆகியோர் நடத்தி வருகின்றனர.
இந்த நிலையில் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி எங்கள் ஊர் சாதனை பெண்மணிகள் என்ற சிலம்பம் நிகழ்ச்சியை நடத்தினர் இதில் சிலம்பம் பள்ளியில் பயிலும் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி காட்டினார் மேலும் சிலம்பம் குழு சார்பில் எல்.ஜி புதூர் பகுதியில் அங்கன்வாடியில் பணியாற்றும் நான்கு பெண்களும் தூய்மை பணியாளராக பணியாற்றும் இரண்டு பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிலம்பம் குழு சார்பாக சேனூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மணி துணைத் தலைவர் சந்தானம் ஆகியோர் சிறந்த பெண்மணிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள் இதில் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்கள் மாணவ மாணவிகளின் சிலம்பம் சுழற்றும் கலையினை கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசான்கள் ரஜினி வெங்கடேசன் ஆகியோரின் இம்முயற்சியை வெகுவாக பாராட்டினர்