ஒட்டன்சத்திரத்தில் மகளிர் திட்டம் NULM தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி, மற்றும் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி ஆகியோரின் தலைமையிலும், திண்டுக்கல் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இவ்விழாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், மற்றும் சீல்டு வழங்கப்பட்டது. மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் , நாகனம்பட்டி, காந்தி நகர், கஸ்தூரி நகர், தும்பிச்சம்பட்டி கூட்டமைப்பு செயலாளர்கள் சாந்தி, கிரிஜா, அங்காள ஈஸ்வரி கீர்த்தனா மற்றும் சமுதாய அமைப்பின் நடத்தினர் பாஸ்கர சேதுபதி ஆகியோர் இவ்விழாவின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அனைவருக்கும் இந்நிகழ்ச்சியின் முடிவில் உணவு வழங்கப்பட்டது.