Women’s T20 World Cup : மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க பெண்கள் அணி:
லாரா வோல்வர்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மோரிசன் கேப், சுன் லுக் (கேப்டன்), சோலி ட்ரையோன், நாடின் டி கிளர்க், அனேகே பாஷ், சினாலோ ஜஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ லபா.
இங்கிலாந்து மகளிர் அணி:
டேனியல் வியாட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர்ஃப்ரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லெஸ்டோன், கேத்தரின் ஸ்கிவர்ஃப்ரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்.
முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லாரா மற்றும் பிரிட்ஸ் இருவரும் இணைந்து அரைசதம் அடித்து 13.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்தனர். லாரா வோல்வர்ட் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். பிரிட்ஸ் 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரைத் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. அதன்பிறகு மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடாததால் தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவரில் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நாக் அவுட் அரையிறுதியில் இது சவாலான இலக்காகும். ஆனால் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தால் தென்னாப்பிரிக்க அணி பெரிய ஸ்கோரை எடுத்திருக்கும். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்குகிறது.